Friday, November 5, 2010

த‌க்கா‌ளி‌யி‌ன் மக‌த்துவ‌ம்

Posted by Sivaguru Sivasithan

த‌க்கா‌ளி‌யி‌ன் கா‌ய், பழ‌ம் இர‌ண்டிலு‌ம் வை‌ட்ட‌மி‌ன் ஏ‌, ‌பி,‌ ‌சி, சு‌ண்ணா‌ம்பு‌ச் ச‌த்து, இரு‌ம்பு‌ச் ச‌த்து, புரத‌ச் ச‌த்து ஆ‌கியவை உ‌ள்ளன.

த‌க்கா‌ளி ஓரள‌வி‌ற்கு ஆர‌ஞ்சு‌ப்பழ‌த்‌தி‌ன் குண‌த்தை உடையது. எனவே, த‌க்கா‌ளி‌ச் சா‌ற்றுட‌ன் ‌சி‌றிதளவு ச‌ர்‌க்கரை கூ‌ட்டி ‌சிறு குழ‌ந்தைகளு‌க்கு கொடு‌த்து வர உட‌ல் பலமு‌ம், சுறுசுறு‌ப்பு‌ம் உ‌ண்டாகு‌ம்.

த‌க்கா‌ளி செடியை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி குடி‌த்து வர, ‌சிறு‌நீ‌ர் எ‌ரி‌ச்ச‌ல், உட‌ல் ‌வீ‌க்க‌ம், மேக நோ‌ய் முத‌லியவை குணமாகு‌ம். உட‌ல் பல‌ம் பெறு‌ம்.

த‌க்கா‌ளியை துவர‌‌ம் பரு‌ப்புட‌ன் சே‌ர்‌த்து சமைய‌ல் செ‌ய்த சா‌ப்‌பி‌ட்டு வர உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியையு‌ம், ர‌த்த‌ப் பெரு‌க்கையு‌ம் உ‌ண்டா‌க்கு‌ம்.

ர‌த்த சோகை நோ‌‌ய் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு ‌சி‌றிது தூர‌‌ம் நட‌ந்தாலே மூ‌ச்சு‌த்‌திணற‌ல் உ‌ண்டாகு‌ம். இவ‌ர்க‌ள் அடி‌க்கடி த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வர ர‌த்த சோகை நோ‌ய் குணமாகு‌ம்.

0 comments:

Post a Comment